தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இலவச சட்ட உதவி மையம்!

0
919
Free Legal Aid Center Thoothukudi Government Hospital

Free Legal Aid Center Thoothukudi Government Hospital

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் இலவசச் சட்ட உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூடு, தடியடி ஆகியவற்றால் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் அவர்கள் குடும்பத்தினரும், உறவினரும் உடனிருந்து கவனித்து வருகின்றனர். மேலும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் அரசின் நிதியுதவியைப் பெற்றுத் தருதல், வழிகாட்டுதல் ஆகியவற்றுக்காக மாவட்டச் சட்டப் பணிகள் ஆணையம் சார்பில் அரசு மருத்துவமனையில் இலவச சட்ட உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :