53 ஆயிரம் பேர் இடம்பெயர்வு : 64 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன! (தற்போதைய நிலவரம்)

0
1280
64 house damaged flood sri lanka

(64 house damaged flood sri lanka)
நாட்டில் 20 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக தற்போதைய நிலையில், 35 ஆயிரத்து 129 குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து 38 ஆயிரத்து 292 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் இதுவரை 16 மரணங்கள் பதிவாகியுள்ளது.

சீரற்ற காலநிலையால் 13 ஆயிரத்து 199 குடும்பங்களை சேர்ந்த 53 ஆயிரத்து 616 பேர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்கள் 231இல் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மூன்றாயிரத்து 841 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ள நிலையில் , 64 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.

இதேவேளை , மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அதிக மழை காரணமாக ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவொன்று இன்று பகல் திறக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :