கடந்த 2017ம் ஆண்டில் வீதி போக்குவரத்து மீறலுக்கான தண்டப்பண வசூல் 2016 ஆம் ஆண்டை விட 9 வீதத்தால் அதிகரித்துள்ளது. 9 percent penalty increase France
வீதி போக்குவரத்தின் கட்டுப்பாட்டு மீறலுக்கான தண்டனைப்பண அறவீட்டில், பாதிக்கும் மேல் வீதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்கள் பங்கு வகிக்கின்றன. கடந்த 2017ம் ஆண்டில், 1.97 பில்லியன் யூரோக்கள் அரசு தண்டப்பணமாக அறவிட்டுள்ளது.
இந்த மொத்த தொகையில் 1.01 பில்லியன் யூரோக்கள் வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள வேகக்கண்காணிப்பு கமரா மூலம் அறவிடப்பட்டதாகும். இதேவேளை, மற்றொரு பக்கத்தில், வீதியில் அமைக்கப்பட்டுள்ள வேகக்கண்காணிப்பு கமராக்கள் உடைக்கப்பட்டுள்ள வீதமும் அதிகரித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டில் 23 கேமராக்கள் உடைக்கப்பட்டிருந்த நிலையில், 2017ம் ஆண்டில் மொத்தம் 40 கேமராக்கள் முற்றாக அடித்து நொருக்கி சூறையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**Most Related Tamil News**
- பிரான்ஸில் திடீரென பற்றிய கனரக எரிபொருள் கொள்கலன்!
- பிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)!
- தமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.!
- கொழும்பு நகரின் அடியில் உள்ள நாற்றத்தை சுத்திகரிக்காமல் மலர் கொத்துகளை நடுவதில் அர்த்தமில்லை!