2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரியங்காவுக்கு முக்கிய பொறுப்பு

0
339
Congress claimed Priyanka Gandhi major role 2019 parliamentary election

Congress claimed Priyanka Gandhi major role 2019 parliamentary election

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரியங்கா காந்தி முக்கிய பங்காற்றுவார் என்றும் அதைத் தொடர்ந்து பிரதான பொறுப்பு வகிப்பார் என்றும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

அவர் தேர்தலில் போட்டியிடுவார் என்பதற்கான அறிகுறி எதுவும் காணப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் சல்மான் குர்ஷித், “எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் பிரியங்கா காந்தி மிகப்பெரிய ஒரு பொறுப்பை ஏற்பார். ஆட்டத்தை மாற்றி அமைப்பவராகவும் அவர் இருப்பார்” என்று தெரிவித்திருந்தார்.

குர்ஷித் கருத்துக்களுக்கு பதிலளித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“பிரியங்கா காந்தி வதேரா, பல்வேறு வகையிலும் கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பை ஏற்க உள்ளார். அதில் என்ன தவறு இருக்கிறது. அவர் தேர்தலில் நிற்கப்போவதாகவோ மாட்டார் என்றோ குர்ஷித் கூறவில்லை. இந்த இரண்டுக்கும் தொடர்பு ஏதுமில்லை என்றுதான் எனக்கு தோன்றுகிறது. ஆனால் வரும் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அவர் மிகவும் முக்கியமான பங்காற்றுவார் என்பது இதன்மூலம் தெளிவாகிறது. கட்சியின் கூட்டம் மற்றும் இதர நடவடிக்கையிலும் அவ கலந்துகொள்வார். ஆனால் அவருக்கு என்ன முக்கியப் பொறுப்பு என்பது தற்போது வரை யாருக்கும் தெரியாது.

தான் பங்கேற்க வேண்டிய பொறுப்பை தேர்ந்தெடுப்பதில் பிரியங்காவுக்கு உரிமையுண்டு. தேர்ந்தெடுத்தவற்றில் மிகச்சிறப்பாக செயல்படக் கூடியவர் அவர்.

அவர் சிலவற்றில் சில பகுதிகளில் ஒரு பொறுப்பை ஏற்றுக்கொண்டால் அதில் ஒழுங்குபடுத்தப்பட்ட பணிகளையே அவர் செய்வார். அதற்காக அவர் தீவிர அரசியலில் ஈடுபடப்போகிறார் அல்லது தேர்தலில் போட்டியிடுவார் என்று அர்த்தமல்ல.

கட்சியின் கட்டமைக்குள்ளிருந்து அவர் ஏற்கெனவே செயல்பட்டுள்ளார். அதைத்தான் தொடர்ந்து செய்யப் போகிறார். அது அவருடைய தேர்வு. இதைத் தவறுதலாக புரிந்துகொள்ளக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

Congress claimed Priyanka Gandhi major role 2019 parliamentary election

More Tamil News

Tamil News Group websites :