740 வகை புதிய போதைப்பொருட்கள் கண்டுபிடிப்பு

0
553
740 category new drugs discovery

(740 category new drugs discovery)
மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் குழுக்களால் போதை ஏற்படுவதற்காக பாவிக்கப்படும் புதிய போதைப்பொருட்கள் 740 வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, தேசிய ஆபத்தான மருந்துக்கள் காட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வகத்தின் ஆராய்ச்சி உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தேசிய ஆபத்தான மருந்துக்கள் காட்டுப்பாட்டு வாரியத்தின் மன்றத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்தத் தகவலை குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு கண்டறியப்பட்ட மனநிலை மாற்றி போதைப்பொருட்கள் சில மன நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மருந்து வகைகள் எனவும் அவர் கூறியுள்ளார்.

இவை சட்டத்திற்கு எதிரானவை எனக் கண்டறிந்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு வரைவு கோப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நச்சுத்தன்மை கொண்ட அபின் மற்றும் ஆபத்தான சட்டத்தின் கீழ் மனநிலை மாற்றி போதை பொருட்கள் 740 வகைகள் தொடர்ப்பாக ஆய்வு நடத்தப்பட்டு, கிடைக்கப்படும் தகவல்கள் ஊடாக சட்டங்கள் இயற்றி நீதித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மேலும் ஒருமாத காலத்தினுள் சட்டங்கள் இயற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; 740 category new drugs discovery