(Virat Kohli will miss debut county cricket 2018 official announcement)
இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி கவுண்டி கிரிக்கெட் தொடரில் விளையாட மாட்டார் என்ற உத்தியோகபூர்வ அறிவிப்பினை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
விராட் கோஹ்லி முகங்கொடுத்துள்ள ஹெர்னியேட்டட் டிஸ்க் (herniated disc) உபாதையின் காரணமாக இவர் கவுண்டி கிரிக்கெட்டிலிருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
கவுண்டி கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக கோஹ்லி, கவுண்டி அணியான சர்ரேவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் 2 முதற்தர போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் உபாதையில் இருந்தாலும் இரண்டு முதற்தர போட்டிகளிலாவது விளையாடுாவர் என்ற உத்தியோகப்பற்றற்ற செய்தி வெளியாகியிருந்த நிலையில், தற்போது கவுண்டி தொடரிலிருந்து முழுவதுமாக வெளியேறுகிறார் என்ற செய்தியை பிசிசிஐ வெளிப்படுத்தியுள்ளது.
அதுமாத்திரமின்றி விராட் கோஹ்லி எதிர்வரும் ஜுன் மாதம் 15ம் திகதி உடற்தகுதி பரிசோதனைக்கு முகங்கொடுத்து, தனது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் எனவும் பிசிசிஐ சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் கோஹ்லியின் முதுகெழும்பு நரம்புகளில் சில சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் குறித்த உபாதைக்கு இப்போதைக்கு சத்திரச்சிகிச்சைகள் தேவையில்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உபாதை காரணமாக எதிர்வரும் இங்கிலாந்து தொடரின் ஆரம்ப போட்டிகளில் கோஹ்லி விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவு எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இதேவேளை கோஹ்லி எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான் அணியின் அறிமுக டெஸ்ட் போட்டியிலிருந்தும் விலகியுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
- கிரிஸ் கெயிலை அவமானப்படுத்திய பெங்களூர் அணி!!! : வெளியானது உண்மை!
- அலி மற்றும் கேனின் கோல்களுடன் வென்றது டொட்டென்ஹம்!
- முரளிதரனை தலைகுணியசெய்த சம்பவம்! : காலம் கடந்து வெளியானது உண்மை!!!
- புதிய தலைமை பயிற்றுவிப்பாளரை நியமித்தது அவுஸ்திரேலியா
- இலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதிபெற்றார் தத்ரா சில்வா
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- சென்னையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா!
<<Tamil News Group websites>>