Tomorrow complete shutdown Tamil Nadu
தூத்துக்குடியில் சுற்றுசுழலுக்கும், பொதுமக்களுக்கும் ஆபத்தாக செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், தமிழக மக்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிப்பதில் முழுமையாக தோற்றுவிட்ட அதிமுக அரசு பதவி விலகக்கோரியும் போராட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து திராவிட முன்னேற்ற கழகம், அகில இந்திய தேசிய காங்கிரஸ், இடதுசாரி அமைப்புகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் அறவழியில் நாளை மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த போராட்டத்தில் வணிகர்கள், தொழிலார்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை கடையடைப்பு நடைபெறும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார், மேலும் இந்த கடையடைப்பில் தமிழகத்திலுள்ள அனைத்து வணிகர்களும் பங்கேற்க வேண்டுமென அவர் அழைப்பு விடுத்தார்.
More Tamil News
- ஆட்சியர், எஸ்.பியின் பதவியை பறிக்க கமல்ஹாசன் வலியுறுத்தல்!
- துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மக்களுக்கு – சீமான் நேரில் ஆறுதல்!
- மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன் – ரஜினிகாந்த்!
- போராட்டக்காரர்களை சுட்டுக்கொல்வதா? – மு.க.ஸ்டாலின் கண்டனம்!
- தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் பெயர் பட்டியல்!
- கொலைகாரனே வெளியில் வா” ஸ்டெர்லைட் உரிமையாளர் வீட்டின் முன் ஆவேசத்துடன் திரண்ட தமிழர்கள்!