தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு உயிரிழந்த மக்களுக்கு யாழில் அஞ்சலி

0
709
Fresh police firing Thoothukudi 11 person killed Tribute Jaffna

(Fresh police firing Thoothukudi 11 person killed Tribute Jaffna)
தமிழ்நாடு தூத்துக்குடியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த பொதுமக்களுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடமராட்சி பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரைப் பகுதியில் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த அஞ்சலி நிகழ்வு நேற்று மாலை முன்னெடுக்கப்பட்டது.

தமிழகத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிர்நீத்த அப்பாவி மக்களின் நினைவாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மக்களின் போராட்டத்துக்கு தமது ஆதரவினையும் தெரிவித்த ஈழத் தமிழ் உறவுகள், மக்களின் போராட்டத்தை பொலிஸார் துப்பாக்கியைப் பயன்படுத்தி அடக்க முயற்சித்தமையையும் வன்மையாக கண்டித்தனர்.

தமிழகம் தூத்துக்குடியில் ஸ்ரெலைட் ஆலையை மூட வலியுறுத்தி மக்களால் நடத்தப்படும் மாபெரும் போராட்டத்தின நூறாவது நாளான நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

இதன்போது தமிழகப் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மாணவி ஒருவர் உட்பட 10 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்தனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Fresh police firing Thoothukudi 11 person killed Tribute Jaffna