சிறுவனை துஷ்பிரயோகப்படுத்திய பொலிஸ் அதிகாரி; கெபிதிகொல்லாவையில் சம்பவம்

0
768
Police officer abused 12 year old boy

(Police officer abused 12 year old boy)
வெலிஒயா பொலிஸ் நிலையத்தில் வன்கொடுமைக்குள்ளான 12 வயது சிறுவனை வடமத்திய மாகாண நன்னடத்தை திணைக்களத்தின் சிறுவர்களைத் தடுத்து வைக்கும் இல்லத்தில் தடுத்து வைப்பதற்கு கெபிதிகொல்லாவை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தகடுகள் திருட்டு தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடு தொடர்பாக கடந்த 8 ஆம் திகதி குறித்த சிறுவனை பொலிஸார் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சிறுவனை மறுநாள் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தும் வரை அன்றிரவு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்தனர்.

அன்றிரவு பொலிஸ் நிலையத்தில் கடைமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தரினால் இந்தச் சிறுவன் கடுமையாக வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்;தச் சம்பவத்தை எவருக்காவது கூறினால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்வதாக மிரட்டி இந்த வன்கொடுமையை பொலிஸ் உத்தியோகத்தர் மேற்கொண்டதாக 12 வயது சிறுவன் வடமத்திய மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் சிறுவர் தடுப்பு முகாமிலுள்ள நிர்வாக அதிபரிடம் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக இந்தச் சிறுவன் பராமரிப்பு உத்தியோகத்தரிடம் கூறியுள்ளதால் மேலதிக விசாரணைக்காக பராமரிப்பு உத்தியோகத்தர்களால் தாமதிக்காமல் அனுராதபுரம் சிறுவர் மற்றும் பெண்கள் செயலகத்திற்கு இந்;தச் சிறுவனை ஒப்படைத்துள்ளனர்.

இவர்கள் இந்தச் சிறுவனிடம் இருந்து நீண்ட வாக்குமூலத்தை பெற்றதுடன், அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நீதி மருத்துவ அதிகாரியிடம் வைத்திய பரிசோதனைக்காகவும் ஒப்படைத்தனர்.

இந்த வைத்தியப் பரிசோதனையில் குறித்த சிறுவன் பாலியல் துஷ்பிரயோகப் படுத்தப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ள உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் இந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Police officer abused 12 year old boy