பிரான்ஸில் காலநிலை எச்சரிக்கை!

0
713
Heavy rainfall causes damage France

இன்று Var பகுதியிலுள்ள Figanieres கிராமத்தில் பெரும் மழைவீழ்ச்சியுடன் ஏறக்குறைய 50 சென்டிமீட்டர் வரை அலை மேலேலுந்துள்ளது. Heavy rainfall causes damage France

இதனால் வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் சாலைகள் பெரிதும் சேதமடைந்துள்ளன. மேலும், அங்குள்ளவர்கள் பெரிதும் அவதிப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால் அப்பகுதியை அண்மித்த பகுதிகளில் வாகன நெரிசலுடன், போக்குவரத்து வேறு திசைக்கு மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் சம்பவ இடத்திற்கு அவசர கால சேவைகளும் வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், பரிஸுக்குள் இந்த வாரம் முழுவதும் கனமழை எதிர்பார்க்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை பரிஸின் மேற்கு பிராந்தியங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் போக்குவரத்து முடக்கப்பட்டது. அத்துடன் நாளை மற்றும் நாளை மறுதினம் வரை (வெள்ளிக்கிழமை) பரிஸுக்குள் மழை பொழியும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**