குடித்துவிட்டு போதையில் காதை கடித்து விழுங்கிய ஆசாமி!

0
641
Asamy swallowed ears drunken drunkenness

Asamy swallowed ears drunken drunkenness

டெல்லியை சேர்ந்த வாகன ஓட்டுநர் ஜிதேந்தர் குமார், இவர் இரவு வீட்டுக்கு செல்லும்போது சுல்தான்பூரியில் சாலையில் இரு நபர்கள் குடித்து விட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கைகலப்பான நிலையில் அருகில் ஜிதேந்தர் குமார் அவர்களை சமாதானப்படுத்த சென்றார்.

அப்போது குடிபோதையில் சண்டையிட்ட நபரின் ஒருவர் ஜிதேந்தரின் காதை கடித்தார். இதில் அவரது காது துண்டானது. எதிர்பாராதவிதமாக துண்டான காதையும் அவர் விழுங்கியுள்ளார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜிதேந்தருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குடிபோதையில் சண்டையிட்ட நபர்களை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் சந்தோஷ்(43) மற்றும் தீபக்(23) என தெரியவந்துள்ளது,

அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 324 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வாழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :