(google maps 3d car icons ios)
கூகுள் மேப்ஸ் செயலியில் தற்போது புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. வழக்கமாக கூகுள் மேப்ஸ் சேவைகளில் நமக்கு வழி காட்டி வந்த நீல நிற நேவிகேஷன் அம்பு நீக்கப்பட்டு விட்டது.
இந்த அம்பு குறிக்கு மாற்றாக அழகிய கார் பொம்மைகளை வழங்கப்பட்டுள்ளது. புதிய பொம்மை கார், நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு உங்களை அழைத்து செல்லும். உங்களது விருப்பத்திற்கு ஏற்ப அதிவேக SUV அல்லது பிக்கப் டிரக் என எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம்.
புதிய அம்சம் வெளியாக எவ்வித காரணமும் அறிவிக்கப்படாத நிலையில், இதன் மூலம் நேவிகேஷன் அனுபவம் முன்பை விட வித்தியாசமானதாக இருக்கும். Swap செய்ய பயணத்தின் போது டிரைவிங் நேவிகேஷன் மோடில் உள்ள அம்பு குறியை தட்டி, உங்களுக்கு விருப்பமான வாகனத்தை தேர்வு செய்ய செய்யலாம்.
இந்த அம்சம் முதற்கட்டமாக கூகுள் மேப்ஸ் சேவையின் IOS பதிப்பில் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளதோடு விரைவில் Android பதிபிலும் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.
OUR GROUP SITES
google maps 3d car icons ios