மீண்டும் விளையாடுவாரா வில்லியர்ஸ்??? : பெங்களூர் அணி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!!!

0
672
AB de villiers play ipl 2019 Royal Challengers bangalore

(AB de villiers play ipl 2019 Royal Challengers bangalore)

தென்னாபிரிக்க அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான ஏபி டி வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்தார்.

ஐ.பி.எல். தொடரில் அடுத்த வருடம் விளையாடுவேன் என அறிவித்திருந்த பின்னர், இவர் ஓய்வை அறிவித்திருந்ததால், அடுத்த வருடம் ஐ.பி.எல். தொடரில் விளையாடுவாரா? இல்லையா? என்பது தொடர்பான சந்தேகங்கள் வெளியிடப்பட்டு வந்தனர்.

எனினும் அவர் விளையாடுவாரா? இல்லையா? என்பது தொடர்பிலான முக்கிய அறிவிப்பொன்றை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெளியிட்டுள்ளது.

வில்லியர்ஸ் கடந்த 2011ம் ஆண்டு முதல் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகின்றார். இந்நிலையில் அடுத்த வருடம் நிச்சயமாக அவர் ஐ.பி.எல். தொடரில் விளையாடுவார் என பெங்களூர் அணி அறிவித்துள்ளது.

நேற்றைய தினம் வில்லியர்ஸ் ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்த டுவிட்டர் பதிவுக்கு பதிலளித்திருந்தது. இந்த பதிவுக்கு கீழ் ரசிகர் ஒருவர் வில்லியர்ஸ் அடுத்த வருடம் விளையாடுவாரா? என கேள்வியெழுப்பியிருந்தார்.

குறித்த கேள்விக்கு பெங்களூர் அணியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளம், “ஆம் விளையாடுவார்” என பதிலளித்துள்ளது.

இதன்படி சர்வதேச போட்டிகளில் ஓய்வுபெற்றிருந்தாலும், ஐ.பி.எல். தொடரில் வில்லியர்ஸ் விளையாடுவார் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

<<Tamil News Group websites>>