திகனயில் கலவரம் ஏற்பட வாய்ப்பு; அமித் வீரசிங்கவை கண்டிக்கு வருமாறு பொலிஸ் மா அதிபர் அழைப்பு

0
929
Digana violence amith Weerasinghe called police chief come Kandy

(Digana violence amith Weerasinghe called police chief come Kandy)

கண்டி திகன பகுதியில் கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு உதவி புரியுங்கள் என கண்டி பிரதி பொலிஸ் மா அதிபர் மஹசொன் பலகாயவின் அமித் வீரசிங்கவை கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணத்தினால் கண்டியில் கலவரம் நடைபெற்ற திகன பகுதிக்கு தான் சென்றதாக அமித் வீரசிங்க தெரிவித்ததாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

பிவிதுரு ஹெல உறுமயவின் தலைமை அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

‘மஹசொன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்க தெரிவித்துள்ள கருத்து உண்மையானதா? இல்லையா? என்பது அவருக்கும் பிரதி பொலிஸ் மா அதிபருக்குமே தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தக் கருத்து உண்மையா? பொய்யா? என்பதை அவர்கள் இருவரிதும் கையடக்க தொலைபேசியின் பதிவுகளை ஆய்வு செய்வதன் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்றும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் சுயாதீன விசாரணையொன்றை நடத்துமாறு பொலிஸ் மா அதிபரை வேண்டிக் கொள்வதாகவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆரச்சி கும்புரே சோபித தேரர் கலவரம் இடம்பெற்ற போது மரண வீடொன்றுக்குச் சென்று ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக அங்கிருந்து வெளியேற முடியாது அமித் வீரசிங்கவின் வேண்டுகோளுக்கிணங்க அவரது வீட்டில் தங்கியிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமித் வீரசிங்கவின் வீட்டில் இருந்த ஏனைய ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சோபித தேரரின் வயிற்றில் உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தாக்கியிருக்கிறார்.

இதுதொடர்பாக அவரின் பெற்றோர் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்துள்ளார்கள்.

ஆனால் மனித உரிமை ஆணைக்குழு இதுவரை விசாரணை எதுவும் மேற்கொள்ளவில்லை. தற்போது பொலிஸ் ஆணைக்குழுவில் முறையிடுவதற்கு அவர்கள் தீர்மானித்துள்ளார்கள்.

ஆனால் பொலிஸ் ஆணைக்குழுவின் மூலம் நீதி நிலைநாட்டப்படுமா? எனத் தெரியவில்லை. பொலிஸ் ஆணைக்குழு கூறுபவைகளை பொலிஸ் மா அதிபர் கேட்பதில்லை என ஜனாதிபதிக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்படியிருக்கையில் பொலிஸ் ஆணைக்குழு மூலம் நீதியை எப்படி எதிர்பார்க்க முடியும்? என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கேள்வியெழுப்பியுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Digana violence amith Weerasinghe called police chief come Kandy