கடற்கரையில் தொலைந்து போன பிள்ளைகளை ஒன்றிணைக்க உதவும் கைப்பட்டி

0
538
Wristbands help reunite lost kids, Wristbands help reunite lost, Wristbands help reunite, Wristbands help, help reunite lost kids, Tamil Netherland news

(Wristbands help reunite lost kids)

ஏரிகள் மற்றும் கடற்கரைகளில் தவறிப்போகும் சிறுவர்களை அவர்களின் பெற்றோரிடம் மீண்டும் இலகுவில் சேர்க்க கைகளில் கட்டும் பட்டிகளை இந்த ஆண்டும் டச்சு மீட்புப் படை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இந்த பட்டியானது குழந்தை தொலைந்தால், என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக சிறுவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வலியுறுத்துகிறது.

உதாரணமாக பெற்றோரை தொலைத்தால், மீட்புப் பணி அதிகாரிகளை சந்திக்க வேண்டும், அல்லது அடையாள இடம் ஒன்றை தேடி வருதல் போன்ற உத்திகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதை வலியுறுத்துகிறது.

ஒவ்வொரு கோடையிலும் சராசரியாக 775 தொலைந்த குழந்தைகள் நெதர்லாந்தின் கடற்கரைகள் மற்றும் பொழுதுபோக்கு ஏரிகளில் தங்கள் பெற்றோருடன் ஒன்று சேர்க்கப்படுகின்றன.

நாடு முழுவதும் கடற்கரைகளில் இருக்கும் மீட்புப் படை நிலையங்களில் தங்கள் குழந்தைகளுக்கான கைகளில் கட்டும் பட்டிகளை பெற்றோர் பெற்றுக் கொள்ள முடியும்.

Wristbands help reunite lost kids, Wristbands help reunite lost, help reunite lost kids, Tamil Netherland news

Tamil News Groups Websites