வடக்கு கிழக்கு மாகாணங்களில் 40 ஆயிரம் வீடுகள் நிர்மாணம்

0
515
Construction 40 thousand houses Northern, Eastern Provinces

(Construction 40 thousand houses Northern, Eastern Provinces)
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீளக்குடியமர்த்தப்பட்ட குடும்பங்களுக்காக 40 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

வடக்கு கிழக்கு பிரதேசத்தில் மீளக்குடியமர்த்தப்பட்ட குறைந்த வருமானத்தை கொண்ட குடும்பங்களுக்கு கொங்கிறீற் பனல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 650 சதுர அடியைக்கொண்ட 40 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் சமர்ப்பித்த ஆவணக்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்காக பொருத்து வீடு என்ற தொழில்நுட்பத்தின் கீழ் 65 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்காக இதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட ஆலோசனைக்கு சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததன் அடிப்படையில் இதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இதற்கு மாற்று நடவடிக்கையாக தேசிய கட்டிட ஆய்வு அமைப்பினால் சிபார்சு செய்யப்பட்டுள்ள கொங்கிறீற் பனல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமைக்கப்படும் வீடுகளுக்காக இந்த பிரதேசத்தில் உள்ள மக்களை போன்று அரசியல் பிரதிநிதிகளும் வரவேற்றுள்ளனர்.

இதற்கமைவாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இந்த வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவுள்ளன.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Construction 40 thousand houses Northern, Eastern Provinces