MH370 விமானம் தேடும் பணி மீண்டும் தொடர்கின்றது..!

0
922
MH370 flight continues snow, malaysia tami news, malaysia, malaysia news, MH370 flight,

{ MH370 flight continues snow }

மலேசியா: அமெரிக்க நிறுவனத்துடனான MH370 விமானத்தைத் தேடும் ஒப்பந்தத்தை அரசாங்கம் மறு ஆய்வு செய்யும் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி 239 பேருடன் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் சென்ற MH370 விமானம் மாயமானது. அந்த விமானம் எங்கேதான் போனது, என்னதான் ஆனது என்பது இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை..

ஜூன் மாதம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த விமானம் தேடும் படலத்தின் முடிவில், தெற்கு இந்தியப் பெருங்கடலில் விமானத்தைக் கண்டுபிடித்தால் ஹூஸ்டனில் உள்ள ‘ஓசியன் இன்பினிட்டி’ எனப்படும் அமெரிக்க நிறுவனத்திற்கு $70 மில்லியன் (RM278 மில்லியன்) வரை வழங்க இதற்கு முந்தைய தேசிய முன்னணி அரசாங்கம் கடந்த ஜனவரி மாதம் ஒப்புக்கொண்டது.

“இந்த விமானம் தேடும் படலத்தின் விவரங்கள் பற்றி நாங்கள் தெரிந்துக் கொள்ள விரும்புகின்றோம். ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்த பின்னர் அது பயனற்றதாக இருந்தால் நாங்கள் அந்த ஒப்பந்தத்தை நிறுத்துவோம்,” என புத்ராஜெயாவில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மகாதீர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள நிதிப் பிரச்னையை கருத்தில் கொண்டு அரசு செலவினங்களைக் குறைப்பதற்காக இது அறிவிக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது.

Tags: MH370 flight continues snow

<< RELATED MALAYSIA NEWS>>

*என்னை உங்கள் சகோதரர் என்றே அழையுங்கள்..!

*இவ்வாரத்திற்கான எரிபொருள் விலையில் மாற்றமில்லை..!

*மலேசியா பிரதமர் மகாதீர் 15 ஆண்டுக்குப் பின்னர் பிரதமர் அலுவலகத்தில் மீண்டும்..!

*நஜீப்பின் வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் கணக்கெடுப்பு தொடர்கின்றது!

*மலேசியாவில் அமைச்சர்களின் சம்பளம் 10 வீதம் குறைக்கப்படுகின்றது: மகாதீர் அறிவிப்பு!

*ஊடக சுதந்திரத்துக்கு முன்னுரிமை ..! கோபிந்த் சிங்

*மலேசியா முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பிடம் நான்கு மணி நேரம் விசாரணை !

*லிங் லியோங் சிக் மீதான வழக்கை வாபஸ் பெற்றார் நஜிப்..!

*முன்னாள் அரசுச் செயலாளர் ஹாஷிம் காலமானார்!

*துன் மகாதீரின் அனுபவங்களும் திறமையும் மலேசியாவை நல்ல நிலைமைக்கு கொண்டு வரும்..!

<<Tamil News Groups Websites>>