(Malabar egg curry)
சுவையான மலபார் முட்டை கறி நம் வீட்டிலேயே இலகுவாகவும், சுவையாகவும் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க…
தேவையான பொருட்கள்;-
முட்டை – 6
வெங்காயம் – 2
இஞ்சி- 2 சிறிய துண்டுகள்
தக்காளி – 2
ப. மிளகாய் – 4
பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள், மல்லி தூள்- தலா 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
கரம் மசாலா – அரை தேக்கரண்டி
தேங்காய் பால் – 1 கப்
எண்ணெய் – 2 கப்
மேசைக்கரண்டி, கடுகு , சீரகம்- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு
செய்முறை;-
முதலில், ஆறு முட்டைகளையும் நன்கு அவியவிட்டு பின் ஓடுகளை பிரித்து எடுத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
அடுத்ததாக , பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை நன்கு வதக்கவும்.
அடுத்ததாக, மேல் கொடுக்கப்பட்டுள்ள எல்லாவகை தூளையும் சேர்த்து பிரட்டவும் ,பிறகு தக்காளி சேர்த்து நன்கு கிளறி, மசாலா நன்கு வதங்கிய பிறகு இந்த கலவையோடு திக்காக எடுக்கப்பட்ட தேங்காய்ப்பாலை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.
கடைசியாக மசாலா வாசம் போனதும் அவித்து வெட்டி வைத்த முட்டைகளை போட்டு சிறிது கொதி விட்டு மூடி இறக்கிவிடவும்.
இப்பொழுது மலபார் முட்டை கறி தயார்.
tags:-Malabar egg curry
<மேலும் பல சுவையான சமையல் குறிப்புகளுக்கு >>
காரமான சுவையான கொண்டைக்கடலை பிரட்டல்
சலங்கை பணியாரம் செய்து சந்தோஷமாக சாப்பிடுங்க…!