உரிமைக்குரலை அவலக்குரலாக்கிய அராஜக இந்திய அரசு கிளறிவிட்டுள்ள தன்மான தமிழ் உணர்வு!

0
784
India Tamil Nadu Sterlite Factory Protest Government Violence

(India Tamil Nadu Sterlite Factory Protest Government Violence)

தூத்துக்குடியில் நடைபெற்ற போலீஸ் அராஜகத்தில் 12 பேர் வரையான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட விடயம் மிகவும் பாரதூரமான மனிதஅழிவு என்பதை யாருமே மறுக்க முடியாது.

தமது உரிமைக்காக குரல் கொடுத்த அப்பாவி மக்களை இலக்கு வைத்து பண முதலைகளிடம் விலை போன கேவலமான தமிழ்நாடு அரசு முன்னின்று நடத்தியுள்ள இந்த படுகொலைகள் மீண்டும் ஒருமுறை தமிழ் தேசிய உணர்வில் பாரிய வடுவை உண்டாக்கி விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

இன்றைய காலகட்டத்தில் தமிழ் தேசிய உணர்வு என்பது தமிழ்நாடு தாண்டி ஈழம் ,மற்றும் புலம்பெயர் நாடுகள் என பரவலாக பரவியுள்ள நேரத்தில் அப்பாவி தமிழ் மக்களின் மீது பாய்ந்துள்ள துப்பாக்கி ரவை ஒட்டுமொத்த தமிழினத்தின் ஆன்மாவையும் உலுக்கி விட்டுள்ளது.

தனது சொந்த இனத்தின் மக்களின் உரிமை போராட்டத்தை , சினைப்பர் துப்பாக்கிகள் மூலம் தான் அடக்க முடியும் என்கின்ற அராஜக சிந்தனையின் பின்னால் மீறப்பட்டுள்ள போலீஸ் விதிகள் இது ஒரு திட்டமிட்ட கொலைகள் என்பதை பறை சாற்றி உள்ளது.

வன்முறைகளின் போது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான சில விதிகள் உள்ளன.

  • முதலில் சட்டவிரோதமாகக் கூடியிருக்கும் கூட்டத்துக்கு முன் 500 மீட்டர் தூரத்தில் காவல் படையினர் அணிவகுத்து நிற்க வேண்டும்.
  • முன்வரிசையில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை கையாளும் அணியினரும், அடுத்த 3 வரிசைகளில் ‘லத்தி சார்ஜ்’ அணியினரும், அடுத்த வரிசையில் குறைவான எண்ணிக்கையிலான துப்பாக்கி ஏந்திய அணியினரும் தாக்குதலுக்காக நிற்க வேண்டும்.
  • இறுதி வரிசையில் முதலுதவி அணியினர் மக்கள் பாதுகாப்பிற்காக நிற்க வேண்டும். காவல் அதிகாரி முன்னறிவிப்பாக மைக்கில் எச்சரித்து, எச்சரிக்கை கொடியை உயர்த்திப் பிடிக்க வேண்டும். அப்போது கூட்டம் கலைந்து போகாவிட்டால் கண்ணீர்ப் புகைகுண்டுகளைத் தரையில் படும்படியாக, 45 டிகிரி கோணத்தில் வீச வேண்டும்.
  • தொடர்ந்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.. அதன் பிறகு லத்தி சார்ஜ் மூலம் கூட்டத்தை கலைக்க முயல வேண்டும். அப்போதும் நிலமையை சமாளிக்க முடியவில்லை என்றால் துப்பாக்கி அணியினர் இரண்டு வரிசையாக முன்னேறி, துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்பவேண்டும்.
  • காவலர் ஒருவர் 5 அடி முன்னால் வந்து நின்று, துப்பாக்கிச்சூடு நடத்தப்போவது பற்றி மைக்கில் எச்சரிக்கை செய்ய வேண்டும். அதன் பிறகே அதிகாரி குறிப்பிட்ட ஒரு காவலரிடம், கூட்டத்தில் இருக்கும் முக்கிய நபர் ஒருவரை மட்டும் காலில் சுடும்படி உத்தரவிடுவார்.
  • அந்த நபர் சுடப்பட்டதும் கூட்டம் கலைந்து ஓடும் என்பது, காவல் துறையின் கணிப்பு. அப்போது கூட குண்டடி பட்டவருக்கு காவல் துறையில் இருக்கும் முதலுதவி அணியினர் ஓடிச்சென்று, முதலுதவி செய்ய வேண்டும்.

இவை தான் ஒரு நாட்டின் மக்களை காக்கும் தார்மீக பொறுப்புவாய்ந்த ஒரு போலீஸ் படையின் கலக்கம் அடக்கும் விதிமுறைகள்.

ஆனால் தூத்துக்குடியில் எங்கோ தூரத்தில் நின்றுகொண்டு சினைப்பர் துப்பாக்கிகள் மூலம் மார்பு பகுதியை இலக்கு வைத்து மிகவும் கொடூரமாக தாக்குதல் நடாத்தியுள்ள சம்பவம் அயல் நாடு ஒன்றின் எதிரி படைகளை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் போன்ற உணர்வையே கொடுத்துள்ளது.

ஈழத்தில் இடம்பெற்ற தமிழின படுகொலைகளுக்கு சற்றும் குறைவில்லாத விதத்தில் நடத்தப்பட்டுள்ள தூத்துக்குடி படுகொலைகள் கூறியுள்ள செய்தி என்ன?

என்றைக்கும் தமிழினத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் தனித்துவமான தமிழ் இராணுவம் ஒன்றின் தேவையை இந்த அரச பயங்கரவாதம் வலியுறுத்தி கூறியுள்ளது.

எமது தொப்புள் கொடி உறவுகளின் அநியாய படுகொலைகளின் வலியை மரணங்களை நாளும் அனுபவித்த சமூகத்தின் சார்பில் உணர்ந்து கொள்ளுகின்றோம். மத்திய அரசின் கைக்கூலியாக செயலாற்றி வரும் எடப்பாடி அரசாங்கத்தின் கையாலாகாத தனம் பலியெடுத்துள்ள எம் தமிழ் நாட்டு உறவுகளின் உரிமை போராட்டத்தில் எமது குரலும் என்றும் சேர்ந்தே ஒலிக்கும்.

காலம்காலமாக தமிழினத்தின் விடுதலை வேண்டி போராடிய எமது உணர்வுகள் கடல் கடந்தும் உங்கள் கைகளை பற்றி வலுசேர்க்கும்.

விலைபோன அரசு ஒன்று பலிகொண்ட அப்பாவி தமிழ் உறவுகளுக்கு நெற்றிக்கண் இணைய செய்திப்பிரிவின் ஆழ்ந்த அனுதாபங்கள். உரிமைக்காக போராடும் உங்களின் குரல் ஓயாமல் ஒலிக்கட்டும்.

ஏனைய செய்திகள்

பிரபாகரன் என்னும் ஒற்றை சொல்லில் ஒளிந்திருக்கும் மாற்ற முடியாத தலைமைத்துவம்!

கருணாவின் காட்டி கொடுப்புக்கு கூட்டி கொடுத்த அலிசாஹிர் மௌலானாவுக்கு கிடைத்த பரிசு!

கூகிள் நிறுவனத்தின் “தலைவர் பிரபாகரனுக்குரிய அங்கீகாரம்” இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரத்துக்கு விழுந்த அடி!

முஸ்லிம்களின் காட்டி கொடுப்புக்கு இலங்கை அரசின் கைமாறு கலவரமா?

முஸ்லிம் அரசியல்வாதிகளின் வாய்வீரத்துக்கு பலிகொடுக்கப்படும் முஸ்லிம்களின் எதிர்காலம்!

பிற தளங்கள்

Tamilworldnews.com

சமுகவளைத்தள பக்கங்கள் 

நெற்றிக்கண் முகப்பு