பிரான்ஸின் Marseille யில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம்!

0
520
shooting happen France Marseille

பிரான்ஸின் Marseille பகுதியில் தலையை கருப்புத் துணியால் மறைத்து உடையணிந்து வந்த சிலர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். La Busserine என்னும் கலாச்சார மையத்தினருகே நின்றுகொண்டிருந்த ஒரு இளைஞர்கள் கூட்டம் மீது Kalashnikov எனும் தானியங்கித் துப்பாக்கிகளுடன் வந்த சிலர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். shooting happen France Marseille

இதன் பின்னர் அங்கு வந்த பொலிஸாருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட குறித்த நபர்கள் பின்னர் சம்பவ இடத்தை விட்டு ஓடிவிட்டனர்.

குறித்த நபர்கள் காற்றில் பல முறை துப்பாக்கியால் சுட்டதுடன் ஒரு நபரை கடத்தி சென்றுள்ளதாக அங்கிருந்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், இது தொடர்பாக யாரும் கைது செய்யப்பட்டார்களா என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

shooting happen France Marseille

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**