(Ravindra Jadeja Wife Riva Solanki Attacked Police Constable)
இந்திய அணியின் முன்னணி வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியை பொலிஸ் அதிகாரி ஒருவர் நடுவீதியில் வைத்து கொடூரமாக தாக்கிய சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரவீந்திர ஜடேஜா தற்போது ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகின்றார்.
இன்று நடைபெறவுள்ள குவாலிபையர் போட்டிக்காக ரவீந்திர ஜடேஜா மும்பை வந்துள்ள நிலையில், குறித்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் குஜராத்தின் ஜம்நகரில் இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை தனது காரில் சென்றுள்ள ரவீந்திர ஜடேஜாவின் மனைவி, பொலிஸ் கான்ஸ்டபல் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளது. குறித்த பொலிஸ் அதிகாரி தவறான திசையில் வந்துள்ளதன் விளைவாகவே இந்த சிறிய விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.
எனினும் இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் அதிகாரி, ஜடேஜாவின் மனைவி ரிவா சோலங்கியை இரக்கமின்றி கொடூரமாக தாக்கியுள்ளார். ஜடேஜாவின் மனைவியை நடுவீதியில் வைத்து கன்னத்தில் அறைந்துள்ளது மாத்திரமின்றி, அவரது முடியை பிடித்து இழுத்து கார் கண்ணாடியிலும் முட்டச் சென்றுள்ளார்.
இந்நிலையில் குறித்த பகுதியிலிருந்த மக்கள் உடனடியாக வந்து குறித்த பொலிஸ் அதிகாரியிடமிருந்து, ஜடேஜாவின் மனைவியை காப்பாற்றியுள்ளதுடன், வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இதேவேளை ஜடேஜாவின் மனைவியை தாக்கிய பொலிஸ் அதிகாரியை பொலிஸார் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதுமாத்திரமின்றி பொலிஸ் அதிகாரியின் இந்த செயலுக்கு பல்வேறு கண்டனங்களும் வெளியாகி வருகின்றது.
- பிளே-ஆஃப் முதல் இறுதிப்போட்டி வரை!!! : முழுவிபரம் உள்ளே…
- இத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்!
- ஆப்கானிஸ்தானுடன் மோதும் பங்களாதேஷ்! : அணி விபரம் வெளியானது…
- உண்மையில் இதுதான் அற்புதமான பிடியெடுப்பு!!! : ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த வில்லியர்ஸ்! (காணொளி)
- இத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை நோக்கி நகரும் நடால்!
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- கனடாவில் விளையாடவுள்ள ஸ்டீவ் ஸ்மித்… : சற்றுமுன்னர் கிடைத்த தகவல்…
- மென்செஸ்டர் சிட்டி பயிற்றுவிப்பாளரின் ஒப்பந்தக்காலம் நீடிப்பு!
- அறிவிக்கப்பட்டது உலக பதினொருவர் அணி! : வீரர்களின் முழுவிபரம் இதோ!
<<Tamil News Group websites>>