லிங் லியோங் சிக் மீதான வழக்கை வாபஸ் பெற்றார் நஜிப்..!

0
254
Najib withdrawn case Ling Leong Chik, malaysia tami news, malaysia, malaysia news, Najib,

{ Najib withdrawn case Ling Leong Chik }

மலேசியா: முன்னாள் மசீச தேசியத் தலைவரான துன் டாக்டர் லிங் லியோங் சிக்கிற்கு எதிரான தாம் தொடுத்திருந்த அவதூறு வழக்கினை முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் மீட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அறிக்கை கோலாலம்பூர் உயர்நீதிமன்ற ஆணையர் டாரில் கூன் முன்னிலையில் நஜிப் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் சூழல் மாறிப் போய் விட்டது. இந்த வழக்கை விட மிக முக்கியமான அம்சங்களில் தமது தரப்பு கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் துன் லிங்கிற்கு எதிரான வழக்கை மீட்டுக் கொள்ள முடிவு செய்ததாக நஜிப்பின் வழக்கறிஞர் முகமட் ஹஃபாரிஜாம் கூறியுள்ளார்.

இந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதை முன்னிட்டு செலவு தொகையாக 25 ஆயிரம் ரிங்கிட்டை துன் லிங்கிற்கு வழங்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது என்றார் அவர்.

பொதுமக்கள் பணத்தை நஜிப் எடுத்துக் கொண்டதாகவும் நாட்டை வழி நடத்த அவர் தகுதியானவர் அல்ல என்று துன் லிங் பேசியிருந்தது தொடர்பில் அவர் மீது நஜிப் அவதூறு வழக்குத் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Najib withdrawn case Ling Leong Chik

<< RELATED MALAYSIA NEWS>>

*முன்னாள் அரசுச் செயலாளர் ஹாஷிம் காலமானார்!

*துன் மகாதீரின் அனுபவங்களும் திறமையும் மலேசியாவை நல்ல நிலைமைக்கு கொண்டு வரும்..!

*ஜொகூர் சுல்தானுடன் 2 மணி நேரம் சந்திப்பு நடத்திய அன்வார்!

*எஸ்.ஆர்.சி இண்டர்நேஷ்னல் முறைகேடு விசாரணைக்கு விளக்கமளிப்பதற்காக எஸ்.பி.ஆர்.எம். வந்தார் நஜீப்!

*நஜீப்பின் வழக்கில் இனி நாங்கள் வாதாட மாட்டோம்..! வழக்கறிஞர்கள்

*நாட்டின் கடன் தொகை ஆபத்தான கட்டத்தை எட்டிவிட்டதாக பிரதமர் அறிவிப்பு..!

*கேவியஸ் மீது சட்ட நடவடிக்கை! -மெக்லின் எச்சரிக்கை

*பினாங்கில் பிரிட்டிஷ் பிரஜையை கொடூரமாக தாக்கிய இருவர் கைது..!

*மலேசியரான எவரெஸ்ட் நாயகன் ராமன் நேப்பாளில் சடலமாக மீட்பு..!

<<Tamil News Groups Websites>>