11 பெட்டிகளில் மில்லியன் கணக்கிலான பணம் பறிமுதல்..!

0
701
Money seized 11 boxes, malaysia tami news, malaysia, malaysia news, 11 boxes,

{ Money seized 11 boxes }

மலேசியா: முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கிற்கு சொந்தமான வீடுகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 72 பெட்டிகளில், 11 பெட்டிகளிலுள்ள மில்லியன் கணக்கான பணத்தை போலீசார் எண்ணி முடித்து விட்டனர்.

ஜாலான் துன் ரசாக்கில் உள்ள கே.பி.ஜெ கட்டடத்திற்கு கொண்டு வரப்பட்ட 26 பெட்டிகளில், 11 பெட்டிகளில் உள்ள பணத்தை புக்கிட் அமானின் வர்த்தக குற்றங்கள் பிரிவு எண்ணி முடித்து விட்டதாக பெரித்தா ஹரியான் தகவல் வெளியிட்டுள்ளது.

11 பெட்டிகளில் உள்ள பணம் எண்ணி முடிக்கப் பட்ட வேளையில், மேலும் 15 பெட்டிகளில் இருந்த பணத்தை நேற்று காலை 10 மணிக்கு, அதிகாரிகள் எண்ணத் தொடங்கியுள்ளனர்.

அவற்றை எண்ணி முடிப்பதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுகின்றது. மலேசிய ரிங்கிட்டுடம், அந்நிய நாட்டு பணமும் இருப்பதால், அவற்றை உடனடியாக எண்ணுவது சிரமம் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, நஜிப்பிற்கு சொந்தமான இடங்களில் போலீஸ் அதிரடி சோதனையை நிகழ்த்தியது. அவற்றில் பல பண பெட்டிகள், விலையுயர்ந்த கைப்பைகள், நகைகள் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Money seized 11 boxes

<< RELATED MALAYSIA NEWS>>

*ஊடக சுதந்திரத்துக்கு முன்னுரிமை ..! கோபிந்த் சிங்

*மலேசியா முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பிடம் நான்கு மணி நேரம் விசாரணை !

*லிங் லியோங் சிக் மீதான வழக்கை வாபஸ் பெற்றார் நஜிப்..!

*முன்னாள் அரசுச் செயலாளர் ஹாஷிம் காலமானார்!

*துன் மகாதீரின் அனுபவங்களும் திறமையும் மலேசியாவை நல்ல நிலைமைக்கு கொண்டு வரும்..!

*ஜொகூர் சுல்தானுடன் 2 மணி நேரம் சந்திப்பு நடத்திய அன்வார்!

*எஸ்.ஆர்.சி இண்டர்நேஷ்னல் முறைகேடு விசாரணைக்கு விளக்கமளிப்பதற்காக எஸ்.பி.ஆர்.எம். வந்தார் நஜீப்!

*நஜீப்பின் வழக்கில் இனி நாங்கள் வாதாட மாட்டோம்..! வழக்கறிஞர்கள்

<<Tamil News Groups Websites>>