கிரிக்கெட் சபை தேர்தலில் புதிய முகங்கள்” : டுவிட்டரில் மறைமுகமாக கலாய்த்த மஹேல!

0
464
Mahela Jayawardene tweet SLC Election Candidates

(Mahela Jayawardene tweet SLC Election Candidates)

இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தல் இம்மாதம் 31ம் திகதி நடைபெறவுள்ளது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள் தொடர்பான சர்ச்சை தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.

இந்தமுறையாவது கிரிக்கெட் சபை தலைவர் பதவிக்கு புதியவர்கள் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இம்முறையும் ஏற்கனவே தலைவர்களாக இருந்த மூவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

முன்னாள் கிரிக்கெட் சபையின் தலைமை பதவிகளில் இருந் ஜயந்த தர்மதாஷ, நிஷாந்த ரணதுங்க மற்றும் மொஹான் டி சில்வா அவர்களுடன் தற்போதைய தலைவராக உள்ள திலங்க சுமதிபால ஆகியோர் போட்டியிடுகின்றனர்

இந்நிலையில் புதிய மாற்றத்தை விரும்பும் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தங்களது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதிலும் இலங்கை அணியின் முன்னாள் வீரரான மஹேல ஜயவர்தன தனது ஏமாற்றத்த சற்று வித்தியாசமாக டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த ஊடகவியலாளர் அஷாம் அமீன் வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் விபரங்களை டுவிட்டர் பதிவொன்றில் வெளியிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள மஹேல ஜயவர்தன, இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தலில் நிறைய புதிய முகங்கள் போட்டியிடுவதை பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என பதிவுசெய்துள்ளார்.

<<Tamil News Group websites>>