ஹெமில்டன் வாவி பெருக்கெடுப்பு : புத்தளம் – கொழும்பு ரயில் சேவை பாதிப்பு

0
750
hamilton canal flood Puttalam Colombo rail service affected

(hamilton canal flood Puttalam Colombo rail service affected)
ஹெமில்டன் வாவி பெருக்கெடுத்துள்ளதால் புத்தளம் – கொழும்பு ரயில் சேவை லுனுவில ரயில் நிலையத்துடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் பயணிகள் முன்னெச்சரிக்கையாக செயற்படுமாறு ரயில் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக, புத்தளம் – மன்னார் பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக, புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தெரிவித்தனர்.

கலா ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் புத்தளம் எளுவன்குளம் சப்பத்து பாலத்துக்கு மேலாக ஐந்து அடி உயரத்தில் நீர் பாய்ந்து செல்வதால், அப்பகுதியில் வாகன போக்குவரத்துக்கு பாரிய தடை ஏற்பட்டுள்ளது.

எனவே, புத்தளம் – மன்னார் வீதியில் பயணிப்பவர்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு, புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை