பிரான்ஸ் நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தம்!

0
542
flight cancelled today due_to union strike

மூன்று விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு சங்கங்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் காரணமாக, விமான நிலையங்களான Orly, Lyon மற்றும் Marseille விமான நிலையங்களில் இருந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் 20% வரை, இன்று செவ்வாய்க்கிழமை (மே 22) ரத்து செய்யப்படலாம். flight cancelled today due_to union strike

பொதுத்துறை ஊழியர்களுடனான மூன்றாவது தேசிய நாள் வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக, தொழிற்சங்கங்களான Usac-CGT, FO மற்றும் Unsa ஆகியவை அதிகாரப்பூர்வமாக உள்நாட்டு விமான போக்குவரத்து அதிகாரசபைத் திணைக்களத்திடம் (ஜெனரேல் டி எல்’ஏவியேஷன் (DGAC)) அறிவித்து வேலைநிறுத்தம் செய்யத் திட்டமிட்டுள்ளன.

DGAC, “இவ் ஆர்பாட்டங்களால் நாடு முழுவதும் விமானப் போக்குவரத்து இடையூறை” எதிர்பார்ப்பதாகக் கூறியதுடன், பயணிகள் தங்களது விமான சேவை இயங்குகிறதா, தாமதமாகிறதா அல்லது இரத்து செய்யப்படுகிறதா என்பதை பயணிக்கும் முன் சரிபார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

ஏர் பிரான்ஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் ஈஸிஜெட் உள்ளிட்ட முக்கிய விமான நிறுவனங்கள் தங்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் இன்று(மே 22) குறுகிய கால அறிவிப்பில் இரத்து செய்யப்படலாம் அல்லது தாமதப்படுத்தப்படும் என்று உறுதிப்படுத்தியுள்ளன. (ஏர் பிரான்சின் உள்நாட்டு சேவை உட்பட).

மேலும், வேலைநிறுத்தங்கள் நாடு முழுவதிலுமுள்ள பல தொழிற்துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதில் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், பொது போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய சேவைகள் போன்ற பல துறைகள் அடங்கும்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**