சீரற்ற காலநிலை; மின் விநியோகம் இடைநிறுத்தம்

0
675
Bad weather Power supply suspension

(Bad weather Power supply suspension)
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாதுகாப்பு நடவடிக்கையாக சில பிரதேசங்களில் பாவனையாளர்களுக்கான மின் விநியோகம் இடை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக மின்சார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களாக நாட்டில் பெய்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெள்ள அனர்த்த எச்சரிக்கையும் விடுக்கப்பட்ட நிலையில், இவ்வாறு மின்சாரத்தை இடைநிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 200 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன், பலர் காணாமல் போன நிலையில், இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்கள் அதிகளவில் மண்சரிவினால் பாதிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Bad weather Power supply suspension