அவுஸ்திரேலியா நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்திருந்தது கிடைக்கப்போகின்றது

0
1483
Australians Struggling Cost Life

Australia EU FTA Agreement

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளுக்கு ஐரோப்ப ஒன்றிய தலைவர்கள் அனுமதியளித்துள்ளனர்.

அடுத்த வருடம் மார்ச்சில், ஐக்கிய ராச்சியம் , ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் இந்த பல கோடி டொலர் பெறுமதியான ஒப்பந்தம் கைச்சாத்தாகுமென தெரிவிக்கப்படுகின்றது.

இதனை யூரோவிசன் ஆணைக்குழு முதலாவதாக உறுதிசெய்திருந்தது. இம்முடிவை வரவேற்பதாக குறித்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, குறித்த ஒப்பந்தமானது தமதுக்கு பாதிக்கப்படுமென சில ஐரோப்ப நாடுகள் தெரிவித்துள்ளன.

குறிப்பாக பிரான்ஸ் இந்த ஒப்பந்தத்தில் ஐரோப்பிய ஒன்றியம் அவசரம் காட்டக்கூடாதென தெரிவித்துள்ளது.

இவ் ஒப்பந்தத்தால் தனது நாட்டில் ஏற்கனவே சரிவை எதிர்நோக்கியுள்ள விவசாயத்துறை மீண்டும் பாதிக்குமென பிரான்ஸ் ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.