ஐ.பி.எல். கிண்ணத்தை கைப்பற்றும் அணி எது? : கூறுகிறார் வில்லியர்ஸ்!

0
541
AB de Villiers predicts winner IPL 2018

(AB de Villiers predicts winner IPL 2018)

தென்னாபிரிக்க அணியின் முன்னணி வீரர் ஏபி டி வில்லியர்ஸ் இம்முறை நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் எந்த அணி கிண்ணத்தை சுவீகரிக்கும் என எதிர்வுகூறியுள்ளார்.

ஏபி டி வில்லியர்ஸ் இம்முறை ஐ.பி.எல். தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடினார். எனினும் விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது.

இந்நிலையில் சென்னை, ஹைதராபாத், ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இதில் இம்முறை இறுதிப்போட்டிக்கு எந்த அணிகள் முன்னேறும் என்பதையும், கிண்ணத்தை எந்த அணிக்கும் சுவீகரிக்கும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி  இறுதிப்போட்டிக்கு ஹைதராபாத் மற்றும் சென்னை அணிகள் முன்னேறும் எனவும், டோனி தலைமையிலான சென்னை அணி சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

<<Tamil News Group websites>>