‘பெண்களின் விருப்பத்தோடு தான் உறவுகொண்டேன்’. நித்தியானந்தா அதிரடி.

0
1707

(Swami Nithyananda Court Case Karnata High Courts Produce Order)

தென்னிந்தியாவின் பிரபலமான சுவாமியார் நித்தியானந்தா பெண்களுடன் உறவு கொண்ட வழக்கில் சிக்கியிருந்தது அனைவரும் அறிந்ததே.

இதனை முற்றிலும் மறுத்து வந்த நித்தியானந்தா மீது வழக்கு தொடர்ந்த கர்நாடகா நீதிமன்றம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு சம்மன் அனுப்பியிருந்தது.அவர் மீதுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கடந்த டிசம்பரில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது பெண்களின் விருப்பத்தோடு தான் உறவு கொண்டதாக நித்தியானந்தாவின் பக்கம் இருந்து பதில் அனுப்பப்பட்டிருந்தது. இதனால் இது குற்றமாகாது எனவும் இந்த வழக்கை தள்ளுப்படி செய்யும் படி நித்தியானந்தா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இவ்வழக்கு நேற்றைய தினம் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்திருந்தது. இந்நிலையில் நித்தியானந்தா பெண்களிடம் வற்புறுத்தி சம்மதம் வாங்கியிருக்கலாம் எனவும் உடனடியாக நித்தியானந்தா மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tag: Swami Nithyananda Court Case Karnata High Courts Produce Order