சிம்பாப்வே அணியின் பயிற்றுவிப்பாளராகிய முன்னாள் இந்திய வீரர்

0
584
Rajput appointed short-term Zimbabwe head coach

(Rajput appointed short-term Zimbabwe head coach)

சிம்பாப்வே அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக முன்னாள் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் லால்சாந் ராஜ்பூட் நியமிக்கப்பட்டுள்ளார்.

மூன்று மாத குறுகிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் ராஜ்பூட் சிம்பாப்வே அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளார்.

சிம்பாப்வே அணி, 2019ம் ஆண்டு உலகக்கிண்ணத்துக்கு தகுதிபெற தவறியதால், பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட ஹேர்த் ஸ்ரேக் உட்பட அவரது பயிற்றுவிப்பு குழாம் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர்.

தற்போது ஹேர்த் ஸ்ரேக்குக்கு பதிலாக லால்சாந் ராஜ்பூட் நியமிக்கப்பட்டுள்ளார்.

லால்சாந் ராஜ்பூட்டின் பயிற்சியின் கீழ் சிம்பாப்வே அணி, எதிர்வரும் ஜுலை மாதம் நடைபெறவுள்ள பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுடனான முக்கோண இருபதுக்குழூ-20 தொடரில் பங்கேற்கவுள்ளது.

லால்சாந் ராஜ்பூட் இதற்கு முன்னர் ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

<<Tamil News Group websites>>