Police concentrated Marina watch eagle
தமிழ் அமைப்புகளின் சார்பில் மெரினா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது, அத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மே 17 இயக்கம் அழைப்பு விடுக்கப்பட்டு காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது,ஆனால் சென்னையில் போராட்டம் நடத்துவதற்கும் நினைவேந்தல் செலுத்துவதற்கும் குறிப்பிட்ட இடங்கள் காவல்துறையால் ஒதுக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் நேற்று மெரினா கடற்கரையில் மே 17 உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் சார்பில் காவல்துறையால் ஒதுக்கப்பட்ட இடங்களை மீறி நினைவேந்தல் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியானது, அத்துடன் மே 17 இயக்கம் நடத்தும் நிகழ்ச்சிக்கு ஆதரவளிப்போம் என சில அரசியல் கட்சிகளும் தெரிவித்துள்ளன,
இந்நிலையில் நினைவேந்தல் நிகழ்ச்சி எங்கேயும் நடக்காமல் தடுக்க மெரினாவில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்,
நேப்பியர் மேம்பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் அந்தப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பட்டுள்ளது,
மேலும் தடையை மீறி யாரேனும் மக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது, இந்நிலையில் தமிழ் அமைப்பினர் பலர் கையில் நினைவேந்தால் பதாகைகளுடன் சாலையில் வருகை தந்துள்ளனர்.
More Tamil News
- 176 அடி உயர கோபுரத்தின் மீது ஏறிய மன நோயாளி!
- பேருந்தின் பின்னால் மோதி இரு வாலிபர்கள் உயிரிழந்த பரிதாபம்!
- மதிமுக – நாம் தமிழர் கட்சியினர் திடீர் மோதல் : நடுரோட்டில் அடிதடி!
- தன் ரசிகரின் மறைவிற்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டிய நடிகர் சிலம்பரசன்!
- காதலியின் கணவனை 20 முறை கத்தியால் குத்திய காதலன்!
- சிலிண்டர் வெடித்து சிறுவன் உயிரிழப்பு!
- ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி வீட்டில் கொள்ளை!
- மூர்மார்க்கெட் ரயில் நிலையத்தில் வழிப்பறி சம்பவம் : ஆர்பிஎப் வீரருக்கு அரிவாள் வெட்டு!
- பணி – கேடர் ஒதுக்கீட்டு முறை மாறுகிறது!
- அனைவரது ஆதரவுக்கும் நன்றி – ஆர்.ஜே பாலாஜி இன்று இரவு அறிவிப்பு!