இன்றைய ராசி பலன் 21-05-2018

0
678
Today horoscope 21-05-2018

(Today horoscope 21-05-2018 )

இன்று!
விளம்பி வருடம், வைகாசி மாதம் 7ம் தேதி, ரம்ஜான் 5ம் தேதி,
21.5.18 திங்கட்கிழமை, வளர்பிறை, சப்தமி திதி இரவு 2:18 வரை;
அதன் பின் அஷ்டமி திதி, ஆயில்யம் நட்சத்திரம் இரவு 2:15 வரை;
அதன் பின் மகம் நட்சத்திரம், சித்த, மரண யோகம்.

நல்ல நேரம் : காலை 6:00–7:30 மணி
ராகு காலம் : காலை 7:30–9:00 மணி
எமகண்டம் : காலை 10:30–12:00 மணி
குளிகை : மதியம் 1:30–3:00 மணி
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : உத்திராடம்,திருவோணம்
பொது : சிவன், நாகதேவதை வழிபாடு, கரிநாள்.

மேஷ ராசி நேயர்களே !
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். வாரிசுகளின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்வீர்கள். வருமானம் திருப்தி தரும். அரைகுறையாக நின்ற பணியை தொடருவீர்கள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷப ராசி நேயர்களே !
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொல்லைகள் அகலும். கூட்டுத் தொழிலை தனித் தொழிலாக மாற்றலாமா என்ற சிந்தனை மேலோங்கும். அலுவலகப் பணிகளில் இருந்த அல்லல் தீரும். வரவு திருப்தி தரும்.

மிதுனம் ராசி நேயர்களே !
ஆதாயம் அதிகரிக்கும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவலொன்று வந்து சேரலாம். அன்னிய தேசத் தொடர்பு அனுகூலம் தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள்.

கடக ராசி நேயர்களே !
தொல்லை கொடுப்பவர்கள் தோள்கொடுத்து உதவும் நாள். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். ஆடை, ஆபரண, சேர்க்கையுண்டு. அலங்காரப் பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள்.

சிம்ம ராசி நேயர்களே !
தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாள். துணிவும், எதிர்பார்த்தபடியே வந்து சேரும்.தொழிலில் புதிய பணியாளர்களை சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். மாற்று மருத்துவத்தை மேற்கொள்வதால் உடல்நலம் சீராகும்.

கன்னி ராசி நேயர்களே !
மதிநுட்பத்தால் மகத்தான காரியமொன்றைச் செய்து முடிக்கும் நாள். வெளிவட்டாரத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். வீடு, நிலம் சம்மந்தமான முடிவுகள் எடுக்க முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள்.

துலாம் ராசி நேயர்களே !
அலைபேசி மூலம் அனுகூலமான தகவல் வந்து சேரும் நாள். நினைத்தது நிறைவேறி நிம்மதி காண்பீர்கள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும். வாகனப் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.

விருச்சிகம் ராசி நேயர்களே !
சிநேகிதர்களால் செல்வநிலை உயரும் நாள். திடீர் பயணம் உண்டு. மனைகட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும். உடல் நலத்தில் கவனத்தைச் செலுத்துவது நல்லது. மறதி அதிகரிக்கும். மாலையில் விரயம் உண்டு.

தனுசு ராசி நேயர்களே !
கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். கூடுதல் லாபம் தொழில் கிடைக்கும். இல்லத்தினர்களின் ஒத்துழைப்போடு இன்றைய பணிகளைச் செய்து முடிப்பீர்கள். உயரதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறும் வாய்ப்பு உண்டு.

மகர ராசி நேயர்களே !
அமைதி கூடும் நாள். உறவு பகை பாராமல் உதவி செய்வீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். தடைப்பட்ட வருமானம் தானாகவே வந்து சேரலாம். உடன்பிறப்புகள் வழியில் உருவான மனக்கசப்புகள் மாறும்.

கும்பம் ராசி நேயர்களே !
எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும் நாள். எதிரிகளின் பலம் கூடும். குடும்பத்தினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். தொகை வந்த மறுநிமிடமே செலவாகும்.

மீனம் ராசி நேயர்களே !
முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். பேச்சில் கவனம் தேவை. நண்பர்களுக்காக ஒரு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உண்டு. ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு விலகும்.

மேலும் பல சோதிட தகவல்கள்   

 

Keyword:Today horoscope 21-05-2018