மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி

0
490
One killed lightning strikes

(One killed lightning strikes)
தம்போவ குளத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

தம்போவ பகுதியை சேர்ந்த 34 வயதுடைய கீத் சதுரங்க என்பவரே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவிக்கின்றது.

உயிரிழந்தவரின் சடலம் தம்போவ பிரதேச வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்பொழுது நிலவிவரும் இடியுடன் கூடிய மழை காரணமாக பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; One killed lightning strikes