இத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்!

0
608
Nadal wins Italian Open Tittle 2018

(Nadal wins Italian Open Tittle 2018)

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் சம்பியன் பட்டத்தை ஸ்பெயினின் முன்னணி வீரர் ரபேல் நடால் சுவீகரித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடால், ஜேர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வரவை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடால், 2-1 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

முதல் செட்டை நடால் 6-1 என கைப்பற்ற, இரண்டாவது செட்டில் ஸ்வெரவ் 6-1 என வெற்றிபெற்று போட்டியை சமனிலைப்படுத்தினார்.

எனினும் நடைபெற்ற மூன்றாவது செட்டில் சிறப்பாக ஆடிய நடால், 6-3 என வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார்.

இந்த வெற்றியுடன் நடால் எட்டவாது தடவையாக இத்தாலி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளதுடன், மீண்டும் டென்னிஸ் தரப்படுத்தலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இம்மாத ஆரம்பத்தில் நடைபெற்ற மெட்ரிட் ஓபனில் டொமினிக் தீமிடம் நடால், தோல்வியடைந்திருந்த நிலையில், இரண்டாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டிருந்தார். எனினும் இரண்டு வாரங்களுக்குள் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

 

<<Tamil News Group websites>>