இரத்தக் களரிக்கே வழிவகுக்கும் : எச்சரிக்கை விடுக்கும் மஹிந்த

0
808
Leads blood transfusions warns Mahinda

(Leads blood transfusions warns Mahinda)
வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகளின் செயல்கள் மற்றும் கருத்துக்கள், இன்னொரு இரத்தக் களரிக்கே வழிவகுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

“வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகளின் செயல்கள் மற்றும் கருத்துக்கள், நாட்டைப் பிளவுபடுத்தும் பரப்புரையின் ஒரு அங்கமாக இருக்கலாம்.

அவர்கள் இன்னொரு இரத்தக் களரிக்கே வழிவகுக்கின்றனர். நாட்டை நேசிக்கும் எவரும், அத்கைய நிலைக்குத் திரும்புவதை விரும்பமாட்டார்கள்.

போரின் போது விடுதலைப் புலிகளுக்குப் பயந்து வடக்கிலுள்ள பெரும்பாலான அரசியல்வாதிகள் அமைதியாக இருந்தனர்.

பலர் விடுதலைப் புலிகளுக்காக வேலை செய்தனர். நாங்கள் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததும், அந்த அரசியல்வாதிகள் கதாநாயகர்கள் ஆகி விட்டனர்.

எல்லா இன, மதங்களையும் சேர்ந்த மக்கள், முப்படையினரின் அர்ப்பணிப்பினால் தான் தீவிரவாதத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டதை மறந்து விடக் கூடாது என்றார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :