ஒரே நாளில் ஆறு விபத்துக்கள், அதிவேக வீதியில் அவதானமாக பயணிக்கவும்

0
614
tamilnews Six accidents expressways due rainy weather

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று மாலையளவில் 6 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

தெற்கு அதிவேக வீதியில் 4 விபத்துக்களும், கட்டுநாயக்க அதிவேக வீதியில் 2 விபத்துக்களும் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தெற்கு அதிவேக வீதியில் ஜீப் ஒன்று பாதையை விட்டு பாதுகாப்பு கம்பத்தில் மோதியுள்ளதுடன், ஒரு குழந்தை உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.

தொடங்கொட மற்றும் கெலனிகம பகுதியில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

இதன்போது காயமடைந்த குழந்தையும், ஒரு பெண்ணும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.