பிளே-ஆஃப் முதல் இறுதிப்போட்டி வரை!!! : முழுவிபரம் உள்ளே…

0
900
ipl play off schedule 2018 news Tamil

(ipl play off schedule 2018 news Tamil)

ஐ.பி.எல். தொடரில் நேற்று இரண்டு முக்கியமான போட்டிகள் நடைபெற்றிருந்தன.

மும்பை – டெல்லி அணிகளுக்கிடையிலான போட்டி மற்றும் சென்னை – பஞ்சாப் அணிகள் மோதியிருந்தன.

முதல் போட்டியில் மும்பை அணி 11 ஓட்டங்களாலும், இரண்டாவது போட்டியில் பஞ்சாப் அணி 5 விக்கட்டுகள் வித்தியாசத்திலும் தோல்வியடைய, பிளே-ஆஃப் சுற்றுக்கு ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி தகுதிபெற்றது.

இதனடிப்படையில் பிளே-ஆஃப் சுற்றில் எந்த எந்த அணிகள் மோதப்போகின்றது.

முதலாவதாக மும்பையில் நடைபெறவுள்ள குவாலிபையர் போட்டியில் சென்னை மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தும்.

இதன் பின்னர் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும்.

இதில் குவாலிபையர் போட்டியில் வெற்றியீட்டும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் என்பதுடன், குவாலிபையர் போட்டியில் தோல்வியடையும் அணி எலிமினேட்டர் போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் குவாலிபையர் 2 போட்டியில் மோதவேண்டும்.

இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி முதலாவது குவாலிபையரில் வெற்றிபெற்றிருக்கும் அணியுடன் இறுதிப்போட்டியில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

<<Tamil News Group websites>>