பிரான்ஸில் வீடற்றவர்களின் தங்குமிடத்தில் தீ!

0
458
boulevard Poniatowski Fire- tram services affected

கடந்த மே 19 பரிஸ் இலுள்ள கட்டிடம் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் 60 பேர் வரை சம்பவ இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. boulevard Poniatowski Fire- tram services affected

பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள boulevard Poniatowski பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீடற்றவர்களுக்கான தங்குமிட ththil திடீரென தீப்பிடித்தது. 500 சதுர மீட்டர்கள் கொண்ட இந்த தங்குமிடத்தில் 60 பேர்வரை தங்கியிருந்தனர். அங்கு தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து இடம்பெற்ற பகுதிக்கு அருகே T3 ட்ராம் வழி இருந்ததனால் ட்ராம் சேவைகள் பாதிப்புக்குள்ளானதாக தீயணைப்பு படை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

தீவிபத்து ஏற்பட்டதற்குரிய காரணங்கள் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. ஐந்து தீயணைப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டு, 15 வீரர்கள் சேர்ந்து தீயணைத்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**