மூன்றே நாளில் பொருளாதாரம் வலுவாகி விட்டதா?- பக்காத்தானுக்கு நஜிப் கேள்வி

0
572
economy stronger Najib question , malaysia tami news, malaysia, malaysia news, Najib,

{ economy stronger Najib question }

மலேசியா: பக்காத்தான் ஹராப்பான் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்துமே கற்பனை உலகுக்குத்தான் பொருந்தும். அவர்களால் ஒருபோதும் அவற்றை நிறைவேற்ற முடியாது என்று முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் கூறியுள்ளார்.

பிடிபிடிஎன் கல்விக் கடன், ஜிஎஸ்டி மற்றும் பெட்ரோல் விலை போன்ற வாக்குறுதிகளைக் குறிப்பிட்டுப் பேசிய நஜிப், இவை கற்பனை உலகிற்கு பொருந்தும். நிறைவேற்ற முடியாது என்று உள்ளூர் ஆங்கில தினசரியான மலாய் மெய்லுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலுக்குப் பிறகு கடந்த மூன்று நாட்களிலேயே இது தெரிந்து விட்டது. பொருளாதாரம் வலுவான நிலையில் இருக்கின்றது என்று அவர்கள் சொல்கின்றார்கள்.

இதற்கு முன்னர் நாட்டின் பொருளாதார நிலை மிக மோசமானதாக இருந்தது என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் மூன்று நாட்களுக்குள் பொருளாதாரம் அபாரமாக மீட்சி கண்டு விட்டதா, என்ன? என்று நஜிப் கேள்வி எழுப்பியிருந்துள்ளார்.

இந்தத் தேர்தல் பிரசாரத்தின் போது என்னை இவர்கள் ஆட்டிப் படைத்தார்கள். ஆனால், காலம் இதற்கெல்லாம் பதில் சொல்லும். இது அதற்கான தருணமல்ல. அவர்கள் நாட்டுக்காக என்ன செய்தார்கள் என்பதை வரலாறு முடிவு செய்யும் என்று நஜிப் கூறியுள்ளார்.

Tags: economy stronger Najib question

<< RELATED MALAYSIA NEWS>>

*நஜிப் மீதான விசாரணை நியாயமான முறையில் நடத்தப்படும்! அன்வார் அறிவிப்பு

*மகாதீரைச் சந்தித்தார் சிங்கப்பூர் பிரதமர்..!

*நஜிப் வீட்டில் 20 ஆண்டு திறக்கப்படாத இரும்புப் பெட்டிக்குள் இருந்தது என்ன?

*பணிப்பெண் கற்பழித்த குற்றத்திற்காக வர்த்தகருக்கு 14 ஆண்டுச் சிறை..!

*எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நஜீப்பிடம் எஸ்.பி.ஆர்.எம். விசாரணை..!

*சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியை துறக்கின்றாரா அஸ்மின் அலி?

*சன்வே’ மனித வளத்துறை குழும இயக்குனரானார் புவனேஸ்!

<<Tamil News Groups Websites>>