1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு!

0
605
1emtipi Special Committee investigate , malaysia tami news, malaysia, malaysia news, 1emtipi ,

{ 1emtipi Special Committee investigate }

மலேசியா: 1எம்.டி.பி. முறைகேடு குறித்து முழுமையாக விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர்துறை அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.

இந்த சிறப்பு குழுவில் உயர்மட்ட தலைவர்கள் தலைமையேற்று அதன் விசாரணையை மேற்கொள்ளவிருப்பதாக தமது அறிக்கையின் வாயிலாக அந்த அலுவலகம் கூறியுள்ளது.

இந்த குழுவில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்.பி.ஆர்.எம்), தேசிய வழக்கறிஞர் மன்றம், அரச மலேசிய போலீஸ் படை, பேங்க் நெகாரா மலேசியா உட்பட மேலும் அது தொடர்பான துறையில் நிபுணத்துவம் பெற்ற பல வழக்கறிஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழுவிற்கு முன்னாள் சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கனி பட்டேல், முன்னாள் எஸ்.பி.ஆர்.எம். தலைவர் டான்ஸ்ரீ அபு காசிம் முகமட், எஸ்.பி.ஆர்.எம். தலைவர் டத்தோஸ்ரீ முகமட் சுக்ரி அப்துல், புக்கிட் அமான் சிறப்பு பிரிவின் முன்னாள் போலீஸ் அதிகாரி டத்தோ அப்துல் ஹமிட் பாடோர் முதலானோர் தலைமையேற்றிருப்பதாக பிரதமர்துறை அலுவலகம் கூறியுள்ளது.

1எம்.டி.பி. முறைகேடு குறித்து முழுமையான விசாரணையை செய்யவும் முறைகேட்டை உறுதி படுத்தவும் சொத்துகளை பறிமுதல் செய்யவும் அந்த முறைகேட்டிற்கு காரணமான நபர் மீது குற்றம் சாட்டவும் வகையில் சிறப்பு குழுவை அமைப்பதற்கு பிரதமர் துன் டாக்டர் மகாதீர் ஒப்புதல் அளித்துள்ளார் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு சொந்தமான 1எம்.டி.பி முதலீட்டு நிறுவனம் குற்றச்செயல் மற்றும் பொது நிதியில் முறைகேடும் செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த முறைகேடு நடப்பு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதமருமான டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்குடன் தொடர்பு படுத்தப்படுகின்றது.

1எம்.டி.பி நிறுவனத்தின் நிதி உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் பதுக்கியும் அல்லது முதலீடும் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த சிறப்பு குழு அமெரிக்கா, சுவிட்ஸர்லாந்து, சிங்கப்பூர், கனடா உட்பட மேலும் 1எம்.டி.பி தொடர்பான பல நாடுகளின் அமலாக்கத் தரப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நாட்டின் காப்பதோடு மக்களின் பணமான அந்நிறுவனத்தின் பணத்தை மீட்பார்கள் என பிரதமர்துறை அலுவலகம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

Tags: 1emtipi Special Committee investigate

<< RELATED MALAYSIA NEWS>>

*அமைச்சராக விருப்பம் இல்லை! லிம் கிட் சியாங்

*மூன்றே நாளில் பொருளாதாரம் வலுவாகி விட்டதா?- பக்காத்தானுக்கு நஜிப் கேள்வி

*நஜிப் மீதான விசாரணை நியாயமான முறையில் நடத்தப்படும்! அன்வார் அறிவிப்பு

*மகாதீரைச் சந்தித்தார் சிங்கப்பூர் பிரதமர்..!

*நஜிப் வீட்டில் 20 ஆண்டு திறக்கப்படாத இரும்புப் பெட்டிக்குள் இருந்தது என்ன?

*பணிப்பெண் கற்பழித்த குற்றத்திற்காக வர்த்தகருக்கு 14 ஆண்டுச் சிறை..!

*எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நஜீப்பிடம் எஸ்.பி.ஆர்.எம். விசாரணை..!

*சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியை துறக்கின்றாரா அஸ்மின் அலி?

*சன்வே’ மனித வளத்துறை குழும இயக்குனரானார் புவனேஸ்!

<<Tamil News Groups Websites>>