தொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா

0
160
Elina Svitolina beats Simona Italian Open final

(Elina Svitolina beats Simona Italian Open final)

இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் வீராங்கனை எலீனா சிவிடோலினா சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் முன்னணி வீராங்கனையாக ரோமானியாவின் சிமோனா ஹலீப்பை, சிவிடோலினா எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் 2-0 என இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்ட சிவிடோலினா, தொடர்ச்சியாக இரண்டாவது இத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

சிறப்பாக ஆடிய சிவிடோலினா 6-0 மற்றும் 6-4 என சிறப்பான வெற்றியை பெற்றுக்கொண்டார்.

சிவிடோலினா கடந்த வருடம் நடைபெற்ற இத்தாலி ஓபன் தொடரின் சம்பியன் பட்டத்தை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

<<Tamil News Group websites>>