(13 people killed Fearing southern province people)
தென் மாகாணத்தில் பரவிவரும் வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கபட்ட 13 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாகவும் இவர்களில் 12 பேர் சிறுவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 600 க்கும் மேற்பட்டவர்களைக் கண்டறிந்துள்ளதாக தென் மாகாண சுகாதார சேவை இயக்குநர் வைத்தியர் ஜீ விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
காலி, கராப்பிடிய போதனா வைத்தியசாலை, மாத்தறை, எல்பிடிய, கம்புறுப்பிடிய, தங்காலை, வலஸ்முல்ல ஆகிய வைத்தியசாலைகளில் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் இவர்களில் அதிகமானோர் சிறுவர்கள் எனவும் வைத்தியர் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
உயிரிழந்துள்ள சிறுவர்கள் நிவ்மோனியா நோயினாலும் முச்சுத் திணறலினாலும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், குறித்த நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உடனே பெற்றுக்கொடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த வைரஸ் காய்ச்சலினால் இலகுவில் பாதிக்கப்படக்கூடியவர்களான இரண்டு வயதுக்கு குறைவான குழந்தைகள், முன்பள்ளி சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார், சுவாச கோளாறு உள்ளோர் மற்றும் வயோதிபர்கள் ஆகியோருக்கு தற்காப்பு முறைகளைக் கையாளவும், பொது இடங்களில் மூக்கு, வாய் என்பவற்றை மூடும் வகையிலான பாதுகாப்பு அணிகலன்களை அணிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
காய்ச்சல், தலைவலி, மூக்குத் திணறல், சளி போன்ற நோய்களின் அறிகுறிகள் காணப்பட்டால், முன்பள்ளி மற்றும் தனியார் வகுப்புகளுக்கோ சிறுவர்களை அனுப்ப வேண்டாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
More Tamil News
- இலங்கைக்கு ஆபத்தாக மாறியது சீனா : அம்பாந்தோட்டை செயற்கைத் தீவுக்கு உரிமை கோருகிறது சீனா
- இலங்கை தமிழன் பிரித்தானியாவில் வெட்டி கொலை
- ஒரே நாளில் ஆறு விபத்துக்கள், அதிவேக வீதியில் அவதானமாக பயணிக்கவும்
- தற்போதைய அரசியல்வாதிகள் அரசியலை புனித பணியாகச் செய்து வருகின்றனர் – அமைச்சர் ரிஷாட்
- நீர்த்தேக்கங்களின் அவசர கதவுகள் திறப்பு – 7 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்
- யாழில். ஆணின் சடலம் மீட்டு; கொலையா? தற்கொலையா?
- கண்டி கம்பளை பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு
- சாவகச்சேரியில் 31 மாடுகளை வெட்ட அனுமதிகொடுத்த தவிசாளர் வசமாக மாட்டினார்
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com
Tags; 13 people killed Fearing southern province people