பெற்றோரின் பிடிவாதத்தால் கர்பிணியாகியிருந்த மகள் செய்துக்கொண்ட சம்பவம் – இனி எந்த பயனும் இல்லை

0
1136
parents again love boy girl suicide eastern province

parents again love boy girl suicide eastern province
மட்டக்களப்பு வாழைச்சேனையில் இருவர் கழுத்தில் சுறுக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ள நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் சடலங்கள் நேற்று மாலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை கோராவெளி நாவலடியூற்றுப் பகுதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் மோட்டார் சைககிள் ஒன்று நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது.

இதனை அவதானித்த ஆடு மேய்க்கும் பெண் ஒருவர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு தகவல் அளித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த இடத்தி;ற்கு விரைந்த பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் மற்றும் ஆடு மேய்க்கும் பெண் மூவருமாக காட்டுப்பகுதிக்குள் தேடுதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் இளைஞர் ஒருவரும் யுவதி ஒருவரும் கழுத்தில் சுறுக்கிட்டுக்கொண்ட நிலையில் தொங்கியுள்ளனர்.

பொலிசாருக்கு அறிவித்து சடலங்களை மீட்டதன் பின்னர் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்போது குறித்த இருவரும் காதலர்கள் என்பதுடன் காதலி கர்பிணியாகவும் காணப்பட்டுள்ளார்.

திகிலிவெட்டை முருகன் கோயில் வீதியை சேர்ந்த தினேஷ்குமார், மற்றும் நூலகர் வீதியை சேர்ந்த நிரோசினி ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

எனினும் பெற்றோர் குறித்த இருவரின் காதலுக்கு மறுப்பு தெரிவித்தமையை தொடர்ந்து அவர்கள் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
parents again love boy girl suicide eastern province

More Tamil News

Tamil News Group websites :