போதைப் பொருள் மயமாகும் கொழும்பு பெண்கள் – இருவர் கைது

0
592
Two women heroin drugs Mattakkuliya Samithipura area trapped

(Two women heroin drugs Mattakkuliya Samithipura area trapped)

மட்டக்குளிய, சமித்புர பகுதியில் ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இரண்டு பெண்கள் போதைபொருள் தடுப்பு பிரிவினரிடம் சிக்கியுள்ளனர்.

மேல் மாகாண போதைபொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலின் படி நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 122 கிராம் 820 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

25 மற்றும் 42 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்களே கைது செய்யப்பட்டதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ள நிலையில், மேல் மாகாண போதைபொருள் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

(Two women heroin drugs Mattakkuliya Samithipura area trapped)

More Tamil News

முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்

Tamil News Group websites :