அபார பந்து வீச்சின் மூலம் சென்னையை வீழ்த்தியது டெல்லி!

0
536
Delhi daredevils beat chennai super kings 2018

(Delhi daredevils beat chennai super kings 2018)

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை அணிக்கெதிரான போட்டியில் டெல்லி அணி 34 ஓட்டங்கள் வித்தியசாத்தில்  அபார வெற்றிபெற்றுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி தடுமாற்றத்துக்கு மத்தியில் துடுப்பெடுத்தாடியது. எனினும் ஹர்சல் பட்டேல் மற்றும் விஜய் சங்கர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் உதவியுடன் ஒரு வழியாக டெல்லி அணி 5 விக்கட்டுகளை இழந்து 162 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஹர்சல் பட்டேல் 16 பந்துகளுக்கு 36 ஓட்டங்களையும், விஜய் சங்கர் 36 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுக்க, ரிஷப் பாண்ட் 38 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் லுங்கி என்கிடி 15 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் சற்று இலகுவான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்னை அணி ஆரம்பத்தில் சிறப்பாக ஆடியது. அம்பத்தி ராயுடு 29 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ஏனைய வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 128 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

ராயுடுவை தவிர ஜடேஜா மாத்திரம் அதிகபட்சமாக 27 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் மிஷ்ரா மற்றும் போல்ட் 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இதேவேளை டெல்லி அணி இந்த வெற்றியுடன் 8 புள்ளிகளை பெற்றுள்ளதுடன், சென்னை அணி தோல்வியினால் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு பின்தள்ளப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளது. இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி வெற்றிபெற்றால் சென்னை பின்னடைவை சந்திக்கும்.

<<Tamil News Group websites>>