யமுனா ஏரியில் தவில் வித்துவானின் சடலம்

0
401
dead body recover wall drinking water lady inform police

dead body recover wall drinking water lady inform police
யாழ்ப்பாணம் நல்லூர் யமுனா ஏரியிலிருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். செம்மணி வீதியைச் சேர்ந்த 66 வயதுடைய இராமையா ஜெயராசா என்ற தவில் வித்துவானே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

5 பிள்ளைகளின் தந்தையான இவர் கடந்த 17 ஆம் திகதி மாலை முதல் காணாமல் போயிருந்த நிலையில் குடும்பத்தினரால் தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில் இன்று காலை பெண் ஒருவர் யமுனா ஏரிக்கு தண்ணீர் அள்ளச் சென்ற வேளையில், ஏரிப் பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனையடுத்து இறந்த உடலின் துர்நாற்றம் வீசுவதாக அந்த பிரதேச கிராம அலுவலருக்கு அறிவித்துள்ளார்.

கிராம அலுவலர் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் யாழ்ப்பாணம் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

யமுனா ஏரி தண்ணீரை அப்பிரதேச மக்கள் பயன்படுத்தி வருகின்றதாகவும், அந்தப் பகுதியில் பாதுகாப்பு வேலி இல்லாத நிலையில், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

யமுனா ஏரி நீரை பாதுகாப்பதற்குரிய பாதுகாப்பு வேலை அமைத்து தருமாறு பல தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் எவரும் பாதுகாப்பு வேலி அமைப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை என்றும் கடந்த காலங்களிலும் யமுனா ஏரியில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
dead body recover wall drinking water lady inform police

More Tamil News

முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்

Tamil News Group websites :