பா.ஜ.க. பண பலத்தால் வெற்றிபெற முயலும்- ராகுல் காந்தி

0
770
confidence vote legally restricted BJP using money power

confidence vote legally restricted BJP using money power

இந்திய கர்நாடக மாநிலத்தில் நம்பிக்கை வாக்கு சட்டபூர்வமாக தடுக்கப்பட்டிருந்தாலும் பண பலத்தை பயன்படுத்தி பா.ஜ.க. வெற்றிபெற முயலும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்தது. ஆனால் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றிருந்த பா.ஜ.க. கவர்னரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரியது.

எனவே, ஆட்சி அமைக்குமாறு பா.ஜனதாவுக்கு ஆளுநர் வாஜூபாய் வாலா அழைப்பு விடுத்ததுடன் எடியூரப்பாவுக்கு முதல்வராக பதவிபிரமானம் செய்து வைத்தார். பெரும் பான்மையை நிரூபிக்க பா.ஜ.க.வுக்கு ஆளுநர் வாஜூபாய் வாலா 15 நாள் அவகாசம் வழங்கியிருந்தார்.

ஆனால் எடியூரப்பா இன்று மாலை 4 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால் பா.ஜ.க.வுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

கர்நாடக ஆளுநர் வாஜூ பாய் வாலா அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்பட்டுள்ளார் என்ற கருத்தை நிரூபிக்கும் வகையில் உயர்நீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளது.

பெரும்பான்மை இல்லாத போதிலும் அரசு அமைப்போம் என்று சூழ்ச்சி செய்யும் நோக்கத்தில் பா.ஜ.க. கூறி வந்தது.

ஆனால் அதை நீதிமன்றம் முறியடித்துள்ளது. சட்டபூர்வமாக தடுக்கப்பட்டிருந்தாலும் தற்போது பண பலத்தை பயன்படுத்தி பா.ஜனதா வெற்றிபெற முயலும் எனத் தெரிவித்துள்ளார்.

confidence vote legally restricted BJP using money power

More Tamil News

TAMIL NEWS GROUP WEBSITES :