வன்னியில் இளைஞன் பலி : முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் சம்பவம்

0
905
35 old killed vanni paranthan

வடக்கு மாகாண திணைக்களத்தில் பணியாற்றும் 35 வயதான கோபாலபிள்ளை குகன் என்ற இளைஞன் நேற்று உயிரிழந்துள்ளார்.

வன்னி பரந்தன், பூநகரிக்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்திலேயே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், ஆத்திசூடி பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் பிக்கப் வாகனத்தின் சில்லு ஒன்று காற்றுப் போனதால் கட்டுப்பாட்டையிழந்தமையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் இன்று நடத்தப்படவுள்ள முகாமைத்துவ உதவியாளர் போட்டிப் பரீட்சைக்கான கடமைக்கு உத்தியோகத்தர்கள் பயணித்த போதே விபத்து இடம்பெற்றது.

விபத்தில் காயமடைந்த மேலும் நான்கு பேர் கிளிநொச்சி வைத்தியசாலை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் பதிவான இந்த சம்பவம் பிரதேச மக்கள் மற்றும் வட மாகாணத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை