Stalin popular influence Actors Rajinikanth Kamal Haasan politics
தமிழகத்தில் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது. அதை மீறி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசனால் அரசியல் செய்ய முடியாது என்று இந்தி திரையுலக மூத்த நடிகர் சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.
நடிகர் சத்ருகன் சின்ஹா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்கும் நண்பர். சினிமாவுக்கு பின்னர் அரசியலுக்குள் நுழைந்த சத்ருகன் சின்ஹா பா.ஜ.க. தலைமை மீது மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்.
தற்போது பீஹார் மாநில பா.ஜ.க.வின் அதிருப்தி எம்.பி.யாகவுள்ளார். மத்திய அமைச்சராகவும் இருந்தவர். ரஜினி, கமல்ஹாசன் இருவரும் அரசியலுக்குள் நுழைவதை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:-
“ரஜினி, கமல், இருவரும் என் நண்பர்கள். அவர்கள், தெளிவான திரைக்கதையோடு தான். அரசியல் களத்தில் குதித்திருப்பார்கள் என நம்புகிறேன்.
அவர்கள் அரசியலில் இறங்குவதற்கு முன் என்னிடம் அறிவுரை கேட்கவில்லை. கேட்டிருந்தால், அரசியலுக்கு வராதீர்கள் என கூறியிருப்பேன். அதில் இருக்கும் கண்ணிவெடிகள் குறித்து அவர்களுக்கு அறிவுரை வழங்கி இருப்பேன்.
காரணம், அவர்கள் நினைப்பதை போல அரசியல் என்பது ரோஜாக்கள் நிறைந்த படுக்கை அல்ல. தமிழகத்தில் ஸ்டாலினுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது. அதை மீறி இவர்களால் அரசியல் செய்ய முடியாது”எனத் தெரிவித்துள்ளார்.
சத்ருகன் சின்ஹா, கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் ரஜினியை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
ஆனால் பா.ஜ.கவை ஆதரிக்க கூடாது. தனிக்கட்சி தான் ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Stalin popular influence Actors Rajinikanth Kamal Haasan politics
More Tamil News
- கோவையில் அமமுகவினர் மீது தாக்குதல் – கார் கண்ணாடி உடைப்பால் பரபரப்பு!
- கர்நாடகாவில் அரசியல் சாசனம் மீதான தாக்குதல் தொடங்கிவிட்டது : நடிகர் பிரகாஷ் ராஜ்!
- நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்துறாங்க’ – நீதிமன்றத்திலேயே சட்டையை கழட்டி கதறிய கைதி!
- சென்னையில் மழையா? மகிழ்ச்சியோடு எதிர்பார்க்கும் மக்கள்!
- பணம் கொடுக்கலனா கொலைப் பண்ணிடுவேன் – மிரட்டல் மன்னர்கள் கைது!
- போதையில் பேருந்து ஓட்டியவரால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
- காவலர் அருங்காட்சியகம் – முதன்முறையாக தமிழகத்தில் திறப்பு!
- காவிரி நீர்ப் பங்கீடு வழக்கு : நாளை மாலை தீர்ப்பு!
- எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டது பற்றி ராகுல்காந்தி விமர்சனம்!
- குதிரை பேரத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா…?
Tamil News Group websites :